பிளாஸ்டிக் அரிசி வதந்தியா

2011 ஆம் ஆண்டில் இந்த வந்தந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. முதல் முதலாக இப்படியொரு செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அமெரிக்க இணையதளமான “ரா ஸ்டோரி” மற்றும் “மேரி சூ” ஆகியவற்றில் வெளியாகின. அந்த இரண்டு செய்தியிலும் எந்த உறுதியான தகவல்களும் இல்லை.சிங்கப்பூர் ஊடகம் ஒன்றில் வியட்நாமில் ப்ளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பல முறை பகிரப்பட்டது. சாப்பிடக்கூடிய ‘உருளைக் கிழங்கு மற்றும் சர்க்கரைக் கிழங்கு’ ஆகியவற்றைப் பயன்படுத்தி அரிசிபோல் செய்யப்பட்ட ஒரு ’ப்ளாஸ்டிக்’ (!) அரிசி என்று செய்தியில் குறிப்பிட்டிருப்பதைக் கூட கவனிக்காமல் ‘ப்ளாஸ்டிக்’ அரிசி என்ற பெயரோடே பலமுறை பகிரப்பட்டது. அந்த செய்திகளில் ‘ஒரு சைனீஸ் உணவக உரிமையாளர்’ குறிப்பிட்டார் என்று பொதுவான பதங்கள் பயன்படுத்தப்பட்டன.ஓராண்டுக்கு பிறகு, மீண்டும் யாரோ ஒருவர் அந்த செய்தியை பேஸ்புக் தளத்தில் போட, அது மீண்டும் பரவலாகியது.

போலி அரிசி என்று வீடியோக்களும் பகிரப்பட்டன. பின் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியாமல் யூ-டியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டன. இதுபோன்ற செய்திகளில் பல வீடியோக்கள் திரித்து பயன்படுத்தப்பட்டன

Recent Posts

Leave a Comment