பத்திரிகை சுதந்திரமும் இந்தியாவும்

 “சுதந்திரமான பத்திரிகைத் துறை என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூணாகும். அப்படிப்பட்ட சுதந்திரத்தை இந்திய பத்திரிகைகளுக்கு எங்கள் அரசு உறுதி செய்யும்”, என்று பிரதமர் மோடி நேற்று தேசிய பத்திரிகை தினத்தை (16 நவம்பர்)  முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 1966 இல் நவம்பர் 16 அன்று  பத்திரிகை தர்மங்களை நிலைநாட்டவும், உரிமைகளை உறுதி செய்யவும் தேசிய பத்திரிகை கவுன்சில் உருவாக்கப்பட்டது.  நவம்பர் 17ஐ பத்திரிகையாளர்களுக்கான தினமாக அனுசரித்து கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த நாட்களை முன்னிட்டு தான் பிரதமரின் இந்த வாழ்த்து.   அவர் அப்படி சொன்னாலும்,  இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்று தான் கூறவேண்டும்.  கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட உலக பத்திரிகை சுதந்திரம் உள்ள 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 136 வது இடத்தில் இருக்கிறது. முந்தைய  ஆண்டை விட  மூன்று இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிலவும் பத்திரிகை சுதந்திரத்திற்கு அடையாளமாக இருக்கிறது பின்வரும் பத்திரிகையாளர்களின் மரணம். 
Click this link for the report / article by ஹரிஹரசுதன் .
Recent Posts

Leave a Comment