‘ஸ்வச் பாரத்’ திட்டத்தால் கழிப்பறை பயன்பாடு அதிகரித்துள்ளதா

https://www.bbc.com/tamil/india-47469988 நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய அரசு ‘ஸ்வச் பாரத்’ (தூய்மை இந்தியா) திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என உறுதியளித்தது. தற்போது 90% இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி கிடைத்துள்ளது. ஆனால் தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வரை 40% இந்தியர்களுக்குத் தான் கழிப்பறை வசதி இருந்தது என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். உண்மை என்ன?தற்போதைய அரசின் கீழ் கழிப்பறை வசதி பெற்ற வீடுகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது உண்மை. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த கழிப்பறைகள் அனைத்தும் சரியாக இயங்கவில்லை அல்லது முறையாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்களும் உள்ளன.

Recent Posts

Leave a Comment