`சும்மா ஒரு விளம்பரம்!’ – மோடி அரசு விளம்பரங்களுக்கு எவ்வளவு பணம் செலவிட்டது?

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய இரண்டு கட்சிகளும் விளம்பரங்களுக்காக மட்டும் ஏறத்தாழ 8,700 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன. 2009 முதல் 2014 வரை, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 3,480 கோடி ரூபாய் விளம்பரங்களுக்கென செலவு செய்துள்ளது. தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஏறத்தாழ 5,200 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இது முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் செய்த செலவைவிட ஏறத்தாழ 51 சதவிகிதம் அதிகமான தொகையாகும்.  

Recent Posts

Leave a Comment